மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் பாரத் புத்தாக்கக் கண்காட்சிக்கு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 12:58PM by PIB Chennai

இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (12.09.2026) தொடங்குகிறது. புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பாரத் புத்தாக்க கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இது மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய திட்டமாக உள்ளது. நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச வாய்ப்பை வழங்கும் தளமாக இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பைச் சர்வதேச அளவிலான பெரு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஆய்வு நிறுவனங்களுடன் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கருப்பொருளுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த கண்காட்சி இந்தியாவின் 37 அதி நவீன தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களைக் காட்சிப்படுத்துகிறது. இது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309079&reg=3&lang=1

****

TV/SV/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309311) வருகையாளர் எண்ணிக்கை : 7