பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026 இயக்கம் வாரணாசியில் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 4:44PM by PIB Chennai

9-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026 இயக்கத்தை வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் இன்று தொடங்கியது. நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ், ஊட்டச்சத்துக் குறித்த ஒரு மாத கால நாடு தழுவிய மக்கள் இயக்கத்தை இது குறிக்கிறது.

இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், உத்தரப்பிரதேச மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி பேபி ராணி மௌரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஊட்டச்சத்து இயக்கத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், அடிப்படை அளவில் ஊட்டச்சத்துச் சேவைகளை வலுப்படுத்துவதிலும் அங்கன்வாடி மையங்கள் வகிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பங்களிப்பை எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308322&reg=3&lang=1

****

TV/IR/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308445) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Kannada