கூட்டுறவு அமைச்சகம்
சஹாரா பணத்தைத் திரும்பப் பெறும் இணையதளம் மீண்டும் இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 8:10PM by PIB Chennai
சஹாரா கூட்டுறவு சங்கங்களின் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்கும் நோக்கில், 'சி.ஆர்.சி.எஸ்-சஹாரா' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கூட்டுறவு அமைச்சகத்தின் தீவிர நடவடிக்கையால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 2025-ல் ஏற்பட்ட நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் முடங்கியிருந்த இந்த இணையதளம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலுவையில் உள்ள சுமார் 20 லட்சம் விண்ணப்பங்களின் சரிபார்ப்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இதுவரை 41,56,711 முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.9,267 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. லக்னோ, போபால், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சஹாரா குழுமக் கூட்டுறவு சங்கங்களின் முதலீட்டாளர்கள் இதன் மூலம் பயனடைவர்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எவ்வித காகிதப் பயன்பாடும் இல்லாமல், முற்றிலும் டிஜிட்டல் முறையில் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியானவர்களுக்கான பணத்தைத் திரும்ப வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308015®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308083)
வருகையாளர் எண்ணிக்கை : 7