உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2029-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கு எட்டப்படும் - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 6:38PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (06.09.2026) கோவாவின் தலைநகரான பனாஜியில் போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்தும் உடனிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரு நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார். திரு நரேந்திர மோடி பிரதமரானபோது, ​​ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், நாட்டின் வேறு சில பகுதிகளில் நக்சலிசம், வடகிழக்கில் பல ஆயுத அமைப்புகளால் அமைதியின்மை ஆகிய மூன்று பெரும் பிரச்சனைகளை நாடு எதிர்கொண்டிருந்தது என்று அவர் கூறினார். தற்போது இவை மூன்றிலும் நிலைமை கணிசமாக மாறி அமைதி ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மாநிலங்களின் ஒத்துழைப்புடன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவதில் வெற்றி எட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். போதைப்பொருள் என்பது நமது எதிர்கால சந்ததியினரை அழிக்கக்கூடிய ஒரு குற்றம் என்று அவர் குறிப்பிட்டார். போதைப்பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பயங்கரவாதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதைக் கட்டுப்படுத்த ஒரு வலுவான அமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்

போதைப் பொருள் ஒழிப்புக்காக, ஜூலை 2026 முதல் ஜூலை 2029 வரையிலான மூன்றாண்டு கால செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். அனைத்து இலக்குகளையும் காலவரையறைக்குள் அடைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார்நாட்டில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்பட்டதைப் போலவே, அதே உறுதியுடன் போதைப்பொருள் பிரச்சனையும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307200&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307225) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Kannada , Malayalam