பிரதமர் அலுவலகம்
பீகாரின் கதிஹாரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
11 APR 2026 10:56PM by PIB Chennai
பீகாரின் கதிஹாரில் நிகழ்ந்த மோசமான விபத்து குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், இந்தச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“பீகாரின் கதிஹாரில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 வழங்கப்படும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2251213®=3&lang=1
***
SS/RB/RJ/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306462)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada