நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு விதிமுறைகள் ஏதுமின்றி, அமோனியம் நைட்ரேட்டை தமது இணையதளத்தின் மூலம் விற்பனை செய்ததற்காக டயல்4டிரேட் டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 3:08PM by PIB Chennai

கட்டாய ஒழுங்குமுறை பாதுகாப்பு விதிமுறைகள் ஏதுமின்றி, அமோனியம் நைட்ரேட்டை தமது இணையதளத்தின் வர்த்தகப் பக்கத்தில் பட்டியலிடுதல், காட்சிப்படுத்துதல், விளம்பரம் செய்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக டயல்4டிரேட் டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 2019-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 10, 20, 21, பிரிவுகளின் கீழ், முதன்மை ஆணையர் திருமதி நிதி காரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்த இறுதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அத்துடன், அமோனியம் நைட்ரேட் அல்லது 1884-ம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் கீழ், வெடிப்பொருளாக வகைப்படுத்தப்பட்ட எந்தவொரு பொருளையும் தமது தளத்தில் பட்டியலிடுதல், காட்சிப்படுத்துதல், விளம்பரம் செய்தல், விற்பனை செய்தல், ஆகியவற்றை உடனடியாக நிறுத்துமாறு டயல்4டிரேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையதளத்தை ஆய்வு மேற்கொண்ட போது, போதிய பாதுகாப்பு நடைமுறைகளின்றி அமோனியம் நைட்ரேட்டை பட்டியலிட்டு விற்பனைக்கு வைத்திருந்ததை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305903&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306093) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada