இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 4:23PM by PIB Chennai

2024-ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகளை மத்திய இளையோர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்விருதுகள் தரைவழி சாகசம், நீர்வழி சாகசம், வான்வழி சாகசம், வாழ்நாள் சாதனை ஆகிய நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

அதன்படி, தரைவழி சாகசப் பிரிவில் திருமிகு பல்ஜீத் கவுர், திரு ஸ்கல்ஜங் ரிக்ஸின் ஆகியோரும், நீர்வழி சாகசப் பிரிவில் திரு ரிமோ சகாவும், வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் திரு ஷிவ் பிரசாத் சமோலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர், இந்த டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகளை தேசிய விளையாட்டு விருதுகள் 2025-ஐ வழங்கும் நிகழ்ச்சியின் போது அளிக்கவுள்ளார்.        

விருது வழங்கும் விழாவின் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் நினைவுச் சின்னம், சான்றிதழ், ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசுத்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305928&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2306092) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada