பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் நடைபெற்ற தூதரகத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2026 10:42PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற தூதரக தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
வர்த்தகம், தொழில்நுட்பம், உத்திசார் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டை வலுப்படுத்துவது குறித்தும், இந்திய வம்சாவளியினருடனான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்றதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"புதுதில்லியில் நடைபெற்ற தூதரகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டேன். வர்த்தகம், தொழில்நுட்பம், உத்திசார் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டை வலுப்படுத்துவது குறித்தும் நமது வம்சாவளியினருடனான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் நாங்கள் விரிவாக விவாதித்தோம்."
***
(Release ID: 2257159)
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304941)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam