மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
அலங்கார வண்ண மீன்வள மேம்பாட்டிற்கான புதிய செயல்திட்டத்தை குடியரசு துணைத்தலைவர் நாளை வெளியிடுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 11:13AM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளத் துறை, நாளை (2026 ஆகஸ்ட் 31, திங்கட்கிழமை) லட்சத்தீவின் அகட்டியில் மத்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், அலங்கார வண்ண மீன்வள மேம்பாட்டிற்கான “மிஷன் ரங்கீன் மச்லி 2031” என்ற செயல் திட்டத்தை வெளியிடுகிறார்.
இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல் அவர்களும், லட்சத்தீவின் நிர்வாகி திரு பிரஃபுல் கோடே படேல் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், மத்திய அரசின் மீன்வளத் துறை அதிகாரிகள், லட்சத்தீவு அரசு, மீன் வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்பார்கள்.
நாட்டின் கடல் வளங்கள் பெரிதாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன. 5.31 மில்லியன் டன் கடல் மீன்வளத் திறனுடன், இந்தியா நிலையான மீன்வளம், ஆழ்கடல் மீன்பிடிப்பு, கடல் வளர்ப்பு, நீலப் பொருளாதார மேம்பாடு ஆகியோருக்கான மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. லட்சத்தீவு, ஏறக்குறைய 4 லட்சம் சதுர கிலோ பரப்பளவுள்ள பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்துடன் பயன்படுத்தப்படாத ஆற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மீன் பிடித்தல், மீன் வளர்த்தல், பதனப்படுத்துதல், மதிப்புக்கூட்டல், சந்தை இணைப்புகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, லட்சத்தீவு ஒரு பிரத்யேக கடல்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவுகள் ஏராளமான கடல் அலங்கார வண்ண மீன்வளங்களைக் கொண்டுள்ளன. இவை கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதோடு, வாழ்வாதார உருவாக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன.
நாளைய நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் மீன்வளத் துறையில், பயனாளிகளுக்குப் அரசின் நலத்திட்டங்களை வழங்குவார். அலங்கார வண்ண மீன்வள மேம்பாட்டிற்கான "மிஷன் ரங்கீன் மச்லி 2031" என்ற செயல் திட்டத்தை வெளியிட்டு அதை அறிமுகம் செய்கிறார். இந்த செயல் திட்டம், அலங்கார மீன்வளத்தில் அறிவியல் மேலாண்மை, உயிரியல் பாதுகாப்பு, தர உறுதி ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றிற்கு ஒரு சீரான கட்டமைப்பை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304612®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304681)
வருகையாளர் எண்ணிக்கை : 19