பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
திருத்தியமைக்கப்பட்ட சிபிஜி எரிவாயு விலை, நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தாமல் உற்பத்தியாளர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2026 10:56AM by PIB Chennai
கோபர்தன் (GOBARdhan) திட்டத்தின் கீழ் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவின் (சிபிஜி) திருத்தியமைக்கப்பட்ட விலை, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் வீட்டு உபயோகக் குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகியவற்றின் நுகர்வோர் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி முற்றிலும் தவறான மற்றும் சீரற்ற அனுமானங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் விலை, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (சிஎன்ஜி) சில்லறை விற்பனை விலையில் 85 சதவீதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட விலையின் அடிப்படையில், இது ஒரு மெட்ரிக் மில்லியன் அலகிற்கு ரூ.1,478 ஆக அமைகிறது. 'கோபர்தன்' திட்டத்தின் கீழ், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவின் (சிபிஜி) விலை ஒரு மெட்ரிக் மில்லியன் அலகிற்கு ரூ.2,110 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 43% கூடுதலாகும்.
இது அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையே தவிர, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் வீட்டு உபயோகக் குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) நுகர்வோர் நேரடியாகச் செலுத்தும் சில்லறை விலை அல்ல. ஒரு மெட்ரிக் மில்லியன் அலகிற்கு ரூ.2,110 என்ற எரிவாயுவிற்கான முழு விலையும் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட மாட்டாது. இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிற இயற்கை எரிவாயுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுமொத்த உள்நாட்டு எரிவாயுத் தொகுப்பின் சராசரிச் செலவாகவே கணக்கிடப்படுகிறது.
திருத்தியமைக்கப்பட்ட இந்த விலை நிர்ணயக் கட்டமைப்பு, இரண்டு முக்கிய அம்சங்களைச் சமநிலைப்படுத்தும் வகையில் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) உற்பத்தி ஆலைகள் பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இயங்குவதற்கு உதவிடும் வகையில் நியாயமான விலையை உறுதி செய்கிறது. அதே நேரத்தில், அரசின் ஆதரவுடன் கூடிய இந்த நடைமுறையின் மூலம் நுகர்வோருக்கு எவ்விதக் கூடுதல் விலையேற்றச் சுமையும் ஏற்படாமல் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304467®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304521)
வருகையாளர் எண்ணிக்கை : 7