உள்துறை அமைச்சகம்
சமஸ்கிருத மொழி இந்தியாவின் அறிவுசார் மரபு, கலாச்சாரம், உணர்வுகளின் அடித்தளமாகத் திகழ்வதுடன் தொன்மையான, அறிவியல்பூர்வமான மொழியாக உள்ளது - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 12:09PM by PIB Chennai
உலக சமஸ்கிருத தினத்தையொட்டி அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சமஸ்கிருதம் இந்தியாவின் அறிவுசார் மரபு, கலாச்சாரம், உணர்வுகளின் அடித்தளமாகத் திகழ்வதுடன் தொன்மை வாய்ந்த அறிவியல்பூர்வமான மொழியாகவும் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள வேதங்கள், உபநிடதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவை பல்வேறு நூற்றாண்டுகளாக மனித குலத்தை அறிவிப்பூர்வமான பாதையில் வழிநடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். சமஸ்கிருத மொழியைப் பாதுகாப்பதிலும் அடுத்த தலைமுறையினருக்கு அதனைக் கொண்டு சேர்ப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும் மரியாதைச் செலுத்துவதாக திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டு மக்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2304071)
SS/SV/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304325)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Manipuri
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Malayalam