பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 10:53AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அநீதிக்கு எதிராக நிற்கவும், சத்தியத்தின் பாதையில் உறுதியாக இருக்கவும் பகவான் பரசுராமர் நமக்கு உத்வேகம் அளிக்கிறார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பகவான் பரசுராமர் இணையற்ற வீரம், ஞானம் ஆகியவற்றின் அடையாளச் சின்னம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகவான் பரசுராமரின் ஆசீர்வாதங்களால் ஒவ்வொரு இதயமும் புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நிரம்பும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பகவான் பரசுராமரின் ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர டி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பகவான் பரசுராமர் ஜெயந்தி நாளில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். அநீதிக்கு எதிராக நிற்கவும், சத்திய மார்க்கத்தில் உறுதியாக இருக்கவும் அவர் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும். ஈடு இணையற்ற வீரம், ஞானத்தின் அடையாளச் சின்னமான பகவான் பரசுராமரின் ஆசீர்வாதங்கள், ஒவ்வொரு இதயத்தையும் புதிய ஆற்றலாலும் புதிய நம்பிக்கையாலும் நிரப்பட்டும். அவருடைய ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றை ஒளிரச் செய்யட்டும்."

***

(Release ID: 2253476)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303756) வருகையாளர் எண்ணிக்கை : 31