வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோவில் இந்தியா - ஜப்பான் புத்தொழில் வட்டமேசை மாநாடு : மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 5:00PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் புத்தொழில் வட்டமேசை மாநாட்டில் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றுப் பேசினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 2,50,000 புத்தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டு, உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் பெரிய உள்நாட்டுச் சந்தை, சிறந்த திறமையாளர்கள், டிஜிட்டல் பொது கட்டமைப்பு, வேகமாக விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழலமைப்பு ஆகியவை, ஜப்பானிய ஒத்துழைப்புக்கு இந்தியாவை ஒரு சிறந்த இடமாக மாற்றுகின்றன என்றும் அவர் கூறினார்.

 

இந்த வட்டமேசை மாநாடு, இரு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், தொழில்துறையினர், புத்தொழில் நிறுவனங்களின் பிரதநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்தது. புத்தொழில் நிறுவனங்கள், ஆழ் தொழில்நுட்பம், புத்தாக்கம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவை தொடர்பாக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், முதலீட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

 

 இந்தியா-ஜப்பான் புத்தொழில் ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக, நான்கு தூண்களை மையமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குக் கட்டமைப்பை திரு பியூஷ் கோயல் முன்மொழிந்தார்: ஆரம்பகட்ட ஆராய்ச்சி, இரு நாடுகளிலும் சோதனை வசதிகளை இணைக்கும் இருவழிப் புத்தாக்கப் பாலம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, கூட்டு புத்தொழில் தளங்கள் ஆகியவை அவை.

 

இந்தியாவின் புத்தொழில் சூழலமைப்பின் முன்னேற்றத்தை ஜப்பானிய பிரதிநிதிகள் வரவேற்றனர். இந்தியா-ஜப்பான் புத்தொழில், புத்தாக்கக் ஒத்துழைப்பை நோக்கி நகர்வதற்கான ஒருமித்த வலியுறுத்தலுடன் இந்தக் கலந்துரையாடல்கள் நிறைவடைந்தன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303525&reg=48&lang=1

(Release ID : 2303525)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303571) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam