வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, தூய்மை எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 10:44AM by PIB Chennai
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஜப்பானின் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு முன்னனி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது, வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மீள்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்த அமைச்சர் உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்றச் சூழலுக்கு இடையே கடந்த ஆண்டு இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
வரும் 2047-ம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார நாடாக உருவெடுக்கும் வகையில் இந்தியா முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் உள்ள வங்கிகளின் வலுவான முதலீடுகள், வாராக்கடன் அளவு குறைவாக இருத்தல் ஆகியவை நடுத்தர மக்களின் வங்கிப் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவினங்களுக்கேற்ப வருவாய் ஆகியவை நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள், புதுப்பிக்கதக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறைகளில் ஜப்பானிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக திரு பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302979®=3&lang=1
***
SS/SV/GS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2303052)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam