பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையதளப் பாதுகாப்பு, தகவல் சார்ந்த களச் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 21 AUG 2026 11:13AM by PIB Chennai

ராணுவம் சைபர்பீஸ் என்ற அமைப்புடன் இணைந்து இணையதளப் பாதுகாப்புத் தகவல் சார்ந்த களச் சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை (டெரியர் சைபர் க்விஸ்ட் – 3.0) நடத்துகிறது.

இந்தப் போட்டியில் ராணுவம், கல்வித்துறை, தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், ஆயுதப் படைகளிலிருந்து தொழில்நுட்பத் திறமையாளர்கள் பங்கேற்கின்றனர். செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் விழிப்புணர்வு இணையவழி அச்சுறுத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துவதுடன் உள்நாட்டுப் பாதுகாப்புச் சார்ந்த அம்சங்களை வலுப்படுத்துவதற்கும் இது வகைசெய்கிறது.

பக் ஹண்டிங், செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு, படைப்பாற்றல் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான தகுதிச்சுற்று இணையவழித் தேர்வு செப்டம்பர் 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் போட்டி புதுதில்லியில், அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301829&reg=3&lang=1

****

SS/SV/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2302099) வருகையாளர் எண்ணிக்கை : 65