இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர்கள் கூட்டம் - ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 21 AUG 2026 1:03PM by PIB Chennai

இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், பிரிக்ஸ் இளைஞர் நல அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆகஸ்ட் 22-ம் தேதியும், பிரிக்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆகஸ்ட்  23-ம் தேதியும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டம்,  11 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களையும் தூதுக்குழுத் உறுப்பினர்களையும்,  ஒன்றிணைக்கும்.

அமைச்சர்கள் நிலையிலான இந்த சந்திப்புகள், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதோடு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளத்தையும் வழங்கும்.

இக்கூட்டங்களுக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகிப்பார். இளைஞர் நலன் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே இக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இளைஞர் நலத்துறைச் செயலாளர் திரு சுனில் பாலிவால், விளையாட்டுத் துறைச் செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.

ஆகஸ்ட் 22 அன்று நடைபெறும் பிரிக்ஸ் இளைஞர் நல அமைச்சர்கள் கூட்டத்தில், இளைஞர் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும். இக்கூட்டத்தில் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, நல்வாழ்வு, நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும் பிரிக்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கூட்டம், 11 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்களையும் தூதுக்குழு உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301860&reg=3&lang=1

----

SS/PLM/GS


(रिलीज़ आईडी: 2301994) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Gujarati , Assamese , Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी , Marathi , Malayalam