அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சென்னையில் பிரிக்ஸ் அறிவியல் அமைச்சர்கள் மாநாடு - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 21 AUG 2026 2:19PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகளில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  14-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2026-ம் ஆண்டுக்கான தனது பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கருப்பொருளாக “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்பதை இந்தியா தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற பகிரப்பட்ட நம்பிக்கையை இந்தக் கருப்பொருள் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பொருட்கள், உயிரித் தொழில்நுட்பம், ஒளியியல், புவிசார் தொழில்நுட்பங்கள், உயர் செயல்திறன் கணினி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உலகம் விரைவான மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தத் தொழில்நுட்பங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், புத்தாக்கமானது அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும், மலிவானதாகவும், நம்பகமானதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பரந்த மக்கள்தொகை, அறிவியல் திறமை, வளர்ந்து வரும் ஆராய்ச்சித் திறன்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு, பொறுப்பான, எதிர்கால நோக்குடைய புத்தாக்கச் சூழலமைப்பை வளர்ப்பதற்கு உகந்த நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். உரையாடலை நடைமுறை ஒத்துழைப்பாகவும், உறுதியான விளைவுகளாகவும் மாற்றுவதில் பணிக்குழுக்களின் பங்களிப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.

பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பானது, ஒரு வலிமையான தளமாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அறிவியல், புத்தாக்கம் ஆகியவற்றில் ஒரு வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை முன்னெடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூகத்தின் திறனை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய குவாண்டம் இயக்கம், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம், பயோஇ3 கொள்கை, தேசிய புவிசார் கொள்கை உள்ளிட்ட இந்தியாவின் முன்முயற்சிகளை அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், பிரிக்ஸ் நாடுகளிடையே அறவியல் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, புதுமையான, நிலையான உலகை உருவாக்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301900&reg=3&lang=1

-----

SS/PLM/GS


(रिलीज़ आईडी: 2301989) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Gujarati , Telugu , Malayalam