இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 18 AUG 2026 12:50PM by PIB Chennai

தேசிய விளையாட்டு விருதுகள் 2025-ஐ மத்திய இளையோர் நலன், விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்தது.

விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்களை அங்கீகரித்து ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி திரு அருண்குமார் மிஷ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்வேறு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், அர்ஜூனா விருதுக்கு தடகள வீரர்கள் தேஜஸ்வின் சங்கர், முகமது அஜ்மல், பிரியங்கா கோஸ்வாமி, பேட்மிட்டன் விராங்கனைகள் ட்ரீசா ஜாலி, புலேலா காயத்ரி கோபிசந்த், குத்துச் சண்டை வீரர் நரேந்தர், செஸ் வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி, வீராங்கனை திவ்யா ஜிதேந்திர தேஷ்முக் உள்ளிட்ட 17 பேர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுக்குப் பிறகும் விளையாட்டுத் துறைக்குப் பங்களித்ததற்கான அர்ஜூனா விருது (வாழ்நாள்) கால்பந்து வீரர் ஐ அருமைநாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோனாசாரியார் விருது தடகளப் பிரிவை சேர்ந்த பர்வீர் சிங்கிற்கும், குத்துச் சண்டை பிரிவைச் சேர்ந்த சோட்டே லால் யாதவுக்கும், துப்பாக்கிச் சுடுதல் பிரிவைச் சேர்ந்த நேகா நந்தகுமார் சவானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300762&reg=3&lang=1 

***

SS/IR/SM/KR    

 


(रिलीज़ आईडी: 2300861) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Bengali , Bengali-TR , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam