சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பிரிக்ஸ் கூட்டமைப்பானது சுற்றுச்சூழல் சார்ந்த முக்கியச் சவால்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வரையறுக்கக்கூடிய செல்வாக்கு மிகுந்த தளமாக விரிவடைந்துள்ளது- சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் திரு தன்மய் குமார்
प्रविष्टि तिथि:
17 AUG 2026 11:40AM by PIB Chennai
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026-ன் கீழ் சுற்றுச்சூழல் பணிக்குழு, பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த மேம்பாடு குறித்த தொடர்புக் குழு ஆகியவற்றின் உயரதிகாரிகள் பங்கேற்றக் கூட்டம் 2026 ஆகஸ்ட் 17 அன்று புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
மத்தியச் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறைச் செயலாளர் திரு தன்மய் குமார் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திரு தன்மய் குமார், கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பானது வெறும் பொருளாதார உரையாடல் என்ற சூழலிலிருந்து, சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை வரையறுக்கக்கூடிய செல்வாக்கு மிகுந்த தளமாக விரிவடைந்துள்ளது என்று குறிப்பிட்டார். மாசுபாடு அதிகரிப்பு, பல்லுயிர் இழப்பு, புவி வெப்பமயமாதல் போன்ற முக்கிய உலகளாவிய விவகாரங்கள் இதில் அடங்கும் என்று தெரிவித்தார்.
நீடித்த மேம்பாடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், அதற்கேற்ற அணுகல், வளங்களின் திறன், சுழற்சிப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் நிர்வாகம் ஆகிய அம்சங்களிலும் தங்களுடைய கூட்டாண்மை விரிவடைந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300324®=3&lang=1
***
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2300357)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam