உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது அறிவிப்பு

प्रविष्टि तिथि: 14 AUG 2026 8:59AM by PIB Chennai

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல் துறை, ஊர்க்காவல் படை, குடிமைப்பாதுகாப்பு, சிறைச்சாலைத் துறை ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் குடியரசுத்தலைவர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, காவல் துறையிலிருந்து 83 பேரும், தீயணைப்புத் துறையிலிருந்து 4 பேரும், குடிமைப்பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 3 பேரும், சிறைத் துறையைச் சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 92 பேர் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், வீரதீரச் செயலுக்கான விருதுக்கு 301 பேரும், திறம்பட சேவையாற்றியவர்களுக்கான பதக்கங்களுக்காக மொத்தம் 664 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பாகச் சேவையாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கான குடியரசுத்தலைவர் விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும், திறம்பட சேவையாற்றியதற்கான பதக்கங்களுக்காக தமிழக காவல்துறையைச் சேர்ந்த 17 பேரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள்:

1. திரு ஜே விஜய் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்தமிழ்நாடு

2. திரு கே ராமச்சந்திரன்கூடுதல் காவல் கண்காணிப்பாளர்தமிழ்நாடு

3. திரு எஸ் குமார்உதவி கமாண்டன்ட்தமிழ்நாடு

சிறந்த பணிக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக காவல் துறையினரின் பெயர் பட்டியல்:

1. திருமதி எஸ் மாலதிகாவல் ஆய்வாளர்தமிழ்நாடு

2. திரு எஸ் பாஸ்கர்காவல் உதவி ஆய்வாளர்தமிழ்நாடு

3. திரு கே சிவசங்கர்கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்தமிழ்நாடு

4. திரு எம் சோமசுந்தரம்கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்தமிழ்நாடு

5. திரு பி கோவிந்தராஜுகூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்தமிழ்நாடு

6. திரு எஸ் சண்முகம்காவல்துறை துணை கண்காணிப்பாளர்தமிழ்நாடு

7. திருமதி ஜி பத்தருன்னிசா பேகம்காவல் ஆய்வாளர்தமிழ்நாடு

8. திரு சி மதிமாறன்காவல் ஆய்வாளர்தமிழ்நாடு

9. திருமதி கே சரஸ்வதிகாவல் ஆய்வாளர்தமிழ்நாடு

10. திரு பி மாரியப்பன்காவல் ஆய்வாளர்தமிழ்நாடு

11. திருமதி எஸ் லட்சுமிகாவல் ஆய்வாளர்தமிழ்நாடு

12. திருமதி ஜெயா பிரின்சஸ், காவல் ஆய்வாளர்தமிழ்நாடு

13. திரு கே கோபால்காவல் ஆய்வாளர்தமிழ்நாடு

14. திரு எஸ் மணிமாறன்உதவி கமாண்டன்ட்தமிழ்நாடு

15. திருமதி சி லட்சுமிகாவல் ஆய்வாளர்தமிழ்நாடு

16. திரு ஆர் செந்தில்குமார்காவல் உதவி ஆய்வாளர்தமிழ்நாடு

17. திரு என் சதுரகிரிகாவல் உதவி ஆய்வாளர்தமிழ்நாடு

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299280&reg=3&lang=1

***

SS/SV/GS/SH


(रिलीज़ आईडी: 2299536) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Kannada , Malayalam , Assamese , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia