குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உலகளாவிய சந்தை அணுகல், விரைவான வர்த்தகமயமாக்கல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2026 11:55AM by PIB Chennai

இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உலகளாவிய சந்தை அணுகல், விரைவான வர்த்தகமயமாக்கல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறையும் கையெழுத்திட்டுள்ளன. புதுதில்லியில், 2026 ஆகஸ்ட் 5 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை இயக்குநர் திரு முகமது சாலிக் பர்வேசும் உள்நாட்டு வர்த்தக, தொழில்மேம்பாட்டுத் துறை ஐபிஆர் பிரிவு இயக்குநர் திரு கரன் தாபரும் கையெழுத்திட்டனர்.

சரக்குகளுக்கான புவிசார் குறியீடுகள் (பதிவு, பாதுகாப்பு) சட்டம் 1999-ன் கீழ், இந்தியாவில் புவிசார் குறியீடுகள் பதிவு செய்வதற்கும் சட்டபூர்வ பாதுகாப்பை அளிப்பதற்கும் உள்நாட்டு வர்த்தக தொழில்மேம்பாட்டுத் துறை முக்கியத் துறையாக செயல்படுகிறது. அதேபோல், நாடு முழுவதுமுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்கள், பராம்பரிய தொழில்கள், கைவினைஞர்கள் ஆகியோர்களின் வளர்ச்சி நிதி சூழல், ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் முக்கிய அமைச்சகமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297474&reg=3&lang=1

***

SS/IR/PS/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2297518) வருகையாளர் எண்ணிக்கை : 50