பிரதமர் அலுவலகம்
37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2026 7:11PM by PIB Chennai
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியக் குழுவினர் நான்கு பேரும் ஒரு தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வென்று சிறப்பான திறனை வெளிப்படுத்தியதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மூலக்கூறு உயிரியல், உயிரிவேதியியல், உயிரின வகைப்பாட்டியல், தாவரக் கணினிசார் உயிரியல் போன்ற பாடங்களில் பவ்யா குன்வால், சௌமில் மைதி, நிஷித் கலானி, அன்மோல் குமார் ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இவர்களின் வெற்றி இன்னும் பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியக் குழுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் ஒரு தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றது, மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற பவ்யா குன்வால், சௌமில் மைதி, நிஷித் கலானி, அன்மோல் குமார் ஆகியோரை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். மூலக்கூறு உயிரியல், உயிரிவேதியியல், விலங்கு உடலியல், விலங்கு உருவவியல், வகைப்பாட்டியல், தாவர கணினிசார் உயிரியல் போன்ற பாடங்களில் அவர்கள் அபாரமான அறிவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெற்றி இன்னும் பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
***
(Release ID: 2286346)
SS/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2297076)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati