பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்தியக் கைத்தறித் தயாரிப்புகளைப் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
07 AUG 2026 2:13PM by PIB Chennai
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்தியக் கைத்தறித் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, நாட்டின் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களைக் கௌரவிக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் கைத்தறி என்பது வெறும் துணி அல்ல, அது நமது கலாச்சாரம், மரபுகள் மற்றும் லட்சக்கணக்கான நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளம் என்று சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.
தங்களுக்குப் பிடித்தமான கைத்தறித் தயாரிப்புகளுடன் காணொலிகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, 'தேசிய கைத்தறி தினத்தை' ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மேலும் வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இந்நாளில் 'உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுத்தல்’ என்ற உறுதிப்பாட்டை வலுப்படுத்துமாறும், இந்தியக் கைத்தறித் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது கைவினைஞர்களின் பெருமையை உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295916®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2296019)
आगंतुक पटल : 11