ஜவுளித்துறை அமைச்சகம்
குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி விருதுகளை வழங்குகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 4:42PM by PIB Chennai
நாட்டின் வளமான கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் அரசின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், நாட்டின் கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறி நெசவாளர் சங்கம் அளித்துள்ள விலைமதிப்பற்றப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை 2026 ஆகஸ்ட் 7 அன்று ஜவுளி அமைச்சகம் கொண்டாட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சந்த் கபீர் கைத்தறி விருதுகள், தேசிய கைத்தறி விருதுகள் 2025 ஆகியவற்றை வழங்க உள்ளார். நெசவு, புதுமைக் கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மேம்பாடு, சந்தை முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்பான சாதனைப் படைத்தற்காக மூன்று சந்த் கபீர் கைத்தறி விருதுகளும், 19 தேசிய கைத்தறி விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295532®=3&lang=1
***
TV/IR/SM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2295751)
வருகையாளர் எண்ணிக்கை : 43