தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
படைப்புப் பொருளாதாரத்திற்கான முதன்மையான சர்வதேச சந்தையான பிரிக்ஸ் வேவ் பஜார் மும்பையில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 1:54PM by PIB Chennai
பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டாண்மை நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஒன்றிணைத்த படைப்புப் பொருளாதாரத்திற்கான முதன்மையான சர்வதேச சந்தையான பிரிக்ஸ் வேவ் பஜார் மும்பையில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி ஒலி-ஒளி, படைப்பாற்றல் சார்ந்தத் துறைகளில் கலந்துரையாடல் வர்த்தக ஈடுபாடு, அறிவுசார் பறிமாற்றம் ஆகியவற்றின் மூலம் பிரிக்ஸ் மற்றும் கூட்டாண்மை நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் அரசுப் பிரதிநிதிகள், தொழில் அமைப்புகள், படைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், ஒலிபரப்பாளர்கள், ஓடிடி தளங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், கலாச்சார நிறுவனங்கள் படைப்பாற்றல் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மகாராஷ்டிரா மின்னணு தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ஆஷிஷ் ஷெலார், இந்தியாவின் படைப்பாற்றல்மிக்க சூழலின் இதயமாக திகழும் மும்பைக்கு வருகை தந்துள்ள உலகளாவியப் படைப்பாற்றல் குடும்பத்தினரை வரவேற்பதாகக் கூறினார். கலை, தொழில்நுட்பத்திற்கு இடையேயான எல்லைகள் மறைந்து வருவதாகத் தெரிவித்தார். பிரிக்ஸ் வேவ் பஜார் என்பது வெறும் கண்காட்சியாக மட்டுமின்றி, உலகளாவிய படைப்பாற்றல் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட உயர்நிலையான, சிறப்பான சங்கமம் என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய தகவல், ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சல் குமார், பிரிக்ஸ் கூட்டமைப்பின் திரைப்பட ஒத்துழைப்பின் இந்தியாவின் பங்களிப்பு விரிவடைந்துள்ளதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295396®=3&lang=1
***
VJ/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2295526)
आगंतुक पटल : 10