உள்துறை அமைச்சகம்
மாவட்ட அளவில், நடமாடும் வாகனத் தடயவியல் கட்டமைப்பு
प्रविष्टि तिथि:
05 AUG 2026 3:07PM by PIB Chennai
தடயவியல் திறன்களை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள், மாநில தடயவியல் அறிவியல் ஆய்வகங்களுக்கு நடமாடும் தடயவியல் வாகனங்களை வழங்குவதற்காக ரூ. 496.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவ இடங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யவும், தடயங்களைச் சேகரிக்கவும் உதவிடும் வகையில் நவீன தடயவியல் உபகரணங்களுடன் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் குற்றச் சம்பவ இடத்தைப் பதிவு செய்தல், புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், உயிரியல், நுண் தடயங்களைச் சேகரித்தல், கைரேகைகளைக் கண்டறிந்து சேகரித்தல், தடயங்களின் முதற்கட்ட ஆய்வு, தடயப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துதல் போன்ற அத்தியாவசிய வசதிகள், கருவிகள் இந்த வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு 619 நடமாடும் தடயவியல் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட செயல்பாட்டுச் செலவுகளை அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஏற்க வேண்டும்.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294793®=3&lang=1
(Release ID: 2294793)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295221)
आगंतुक पटल : 7