தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கடந்த ஓராண்டில் பொது ஒலிபரப்பு நிறுவன செயல்பாடு தொடர்பாக எந்தவொரு குறைபாடு குறித்த தகவலும் பெறப்படவில்லை – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 3:26PM by PIB Chennai
2021-26-ம் ஆண்டுகளில் நாட்டில் பிரசார் பாரதி ஒலிபரப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நவீனமயமாக்குதல், தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்காக ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலைபின்னல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், 31.03.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, செலவு, வருவாய் தொடர்பான விவரங்கள் பிரசார் பாரதி இணையதளத்தில் உள்ளன. தலையங்கச் செய்திகள் தலைமை செய்தி ஆசிரியர், மூத்த செய்தி ஆசிரியர் குழுவினரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. பிரசார் பாரதியின் தலையங்க கொள்கைகள், நிகழ்ச்சி விதிமுறைகளுக்கு ஏற்ப அமைவதை உறுதி செய்யும் அதே சூழலில் செய்திகளின் தரம், துல்லியம், சமநிலை ஆகியவற்றை மேம்படுத்த தேவைப்படும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன.
கடந்த ஓராண்டில் பொது ஒலிபரப்பு நிறுவனங்களின் தன்னாட்சி நியமனங்கள் அல்லது செய்தி ஆசிரியர் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் அல்லது ஊடக நிறுவனங்களிடமிருந்து எந்தவித குறைபாடுகள் குறித்த தகவலும் பெறப்படவில்லை. எனினும், நியமனங்கள் தொடர்பாக 7 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இத்தகவலை தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294807®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2295116)
आगंतुक पटल : 5