இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டு 2026-ல், பதக்கம் வென்ற வீரர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 03 AUG 2026 2:14PM by PIB Chennai

கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், இந்திய  வீரர்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கு, மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், அவர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.30 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்குத் தலா ரூ.20 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.10 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கி அமைச்சர் கௌரவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில், இந்திய வீரர்கள் 11 எடைப் பிரிவுகளில் போட்டியிட்டு, ஒரு தங்கம், ஆறு வெள்ளிஒரு வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், விளையாட்டில் சாம்பியன்களை உருவாக்குவதில் பயிற்சியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார். இந்த பாராட்டு விழாவில் பங்கேற்று துரோணாச்சார்யா விருது பெற்ற விஜய் சர்மா உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின்  பயணத்தில், குருவுக்கு (பயிற்சியாளருக்கு) மிகப்பெரிய பங்கு உள்ளது. சாம்பியன்களை உருவாக்குவதில் ஒரு பயிற்சியாளரின் பங்களிப்பை விடச் சிறந்த செயல்பாடு வேறெதுவும் இல்லை என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293712&reg=3&lang=1

***

VJ/PD/SV/SM/KR

 


(रिलीज़ आईडी: 2293864) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati