சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இரு சக்கர வாகன அவசர ஊர்திகளுக்கான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
03 AUG 2026 1:19PM by PIB Chennai
இரு சக்கர வாகன அவசர ஊர்திகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் வரைவு அறிவிக்கையைச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இரு சக்கர வாகன அவசர ஊர்திகள் கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள், மற்றும் மலைப்பகுதிகளில் அவசரக் காலங்களில் விரைவாகச் செயல்படுவதற்கும் மருத்துவச் சேவைகளை அளிப்பதற்கும் உதவும்.
தற்போது மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ், இருசக்கர வாகன அவசர ஊர்திகள் தனித்துவமிக்க வாகனப் பிரிவாக ஒழுங்குப்படுத்தப்படவில்லை. அதன் விளைவாக, அவற்றின் கட்டமைப்பு, செயல்பாட்டு பாதுகாப்பு, நோயாளிகளைக் கையாளும் முறைகள், பதிவு, தகுதிச் சான்று ஆய்வு தொடர்பாகத் தேசிய அளவிலான விதிமுறைகள் நடைமுறையில் இல்லை.
வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு வரைவு விதிமுறைகள் தொடர்பான கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். அதைத் தொடர்ந்து மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன் கீழ் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293691®=3&lang=1
***
VJ/PD/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2293853)
आगंतुक पटल : 18