ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகள் 6 பேர் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 11:32AM by PIB Chennai
கிராமப்புறத் திறன் மேம்பாட்டின் பலனை அங்கீகரிக்கும் வகையில் தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 பயனாளிகளுக்கு 2026 ஆகஸ்ட் 15 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சியிலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதங்களை இந்திய அஞ்சல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் பெற்றுள்ளனர்.
இந்த கௌரவம், அவர்களுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டுமின்றி, திறன் மேம்பாடு, நீடித்த வாழ்வாதாரம், கண்ணியமிக்க வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மூலம் தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் தேசிய அளவிலான அங்கீகாரமும் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293602®=3&lang=1
***
VJ/PD/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2293844)
आगंतुक पटल : 5