வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் ருவாண்டாவும் கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டத்தை நடத்தின

प्रविष्टि तिथि: 01 AUG 2026 12:19PM by PIB Chennai

இந்தியா–ருவாண்டா கூட்டு வர்த்தகக் குழுவின் முதல் கூட்ட அமர்வு, 2026 ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் திரு அமித் குமார் தலைமை வகித்தார். அதேசமயம், ருவாண்டா குழுவிற்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் ஆசியா, பசிபிக், மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் திரு விர்ஜில் ருவான்யாகடரே தலைமை வகித்தார்.

இரு தரப்பினரும் இருதரப்பு பொருட்கள், சேவைகள் வர்த்தகத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தனர். ருவாண்டாவிற்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் மருந்துகள், உயிரியல் பொருட்கள், வாகனங்கள், மின்சார இயந்திரங்கள், இரும்பு, எஃகு பொருட்கள் ஆகியவை அடங்கும்.

அதே சமயம், இந்தியாவிற்கான ருவாண்டாவின் ஏற்றுமதிகளில் ஈயம், மசாலாப் பொருட்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், தாமிரம், ரத்தினக் கற்கள், பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்கள், கனிமங்கள் ஆகியவை அடங்கும்.

இருதரப்பு வர்த்தகப் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், வணிகங்களுக்கு இடையிலான ஈடுபாட்டை எளிதாக்கவும், சந்தை அணுகல் சிக்கல்களைத் தீர்க்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292888&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2292983) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam