பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அதன் நன்மைகள் குறித்த ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 APR 2026 5:31PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய ஒரு கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை நீக்கி, தொழிலாளர்  பயன்பாடு அதிகம் தேவைப்படும் துறைகளை ஊக்குவித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துகிறது என்றும், அதே நேரத்தில் விவசாயம் மற்றும் பால்வளம் போன்ற துறைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது என்றும் அந்தக் கட்டுரை விவரிக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தம் விவசாய உற்பத்தித்திறனுக்கான ஆதரவு மற்றும் முதலீட்டு ஈடுபாடுகளுடன், மாணவர்களுக்கும், திறமையான நிபுணர்களுக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

இந்திய-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) எவ்வாறு இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை நீக்குகிறது, தொழிலாளர் பங்கேற்பு அதிகம்  தேவைப்படும் துறைகளை ஊக்குவிக்கிறது மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில் விவசாயம் மற்றும் பால்வளம் போன்ற துறைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் விவரிக்கிறார்.

இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், விவசாய உற்பத்தித்திறனுக்கான ஆதரவு மற்றும் முதலீட்டு ஈடுபாடுகளுடன், மாணவர்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகிறது.”

----

(Release ID: 2255984)

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2292376) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam