பிரதமர் அலுவலகம்
காலணித் துறையில் தொழில்நுட்ப ஜவுளிகளின் ஒருங்கிணைப்பை எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 APR 2026 4:27PM by PIB Chennai
காலணித் துறையில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பங்கு மற்றும் ஒருங்கிணைப்பை எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் எழுதிய கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
காலணித் துறையில் தொழில்நுட்ப ஜவுளிகள் என்பவை, வெறும் வளர்ந்து வரும் ஒரு கருத்துரு மட்டுமல்ல, அவை ஏற்கனவே அத்துறையில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்ற எளிய, ஆனால் சக்திவாய்ந்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“காலணிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஜவுளிகள் என்பவை, ஒரு வளர்ந்து வரும் கருத்துரு அல்ல, மாறாக அவை ஏற்கனவே இந்தத் துறையில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்ற எளிய, ஆனால் சக்திவாய்ந்த ஒரு கருத்தை இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் @girirajsinghbjp முன்வைக்கிறார்.
இந்த ஒருங்கிணைப்பை அங்கீகரித்து, ஒழுங்கமைத்து, விரிவுபடுத்தி, காலணித் துறையை தொழில்நுட்ப ஜவுளிச் சூழலமைப்பிற்குள் இன்னும் வெளிப்படையாகக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
----
(Release ID: 2256613)
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2292272)
வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam