தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உலோக வடிவமைப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

प्रविष्टि तिथि: 29 JUL 2026 11:20AM by PIB Chennai

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் 2026 ஜூலை 26 அன்று உலோக வடிவமைப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் இரண்டு பேர் பலத்த காயமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. வெடிவிபத்து ஏற்பட்ட பிறகு உருக்கப்பட்ட உலோகம் தொழிலாளர்கள் மீது சிந்தியதாகக் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் அந்தத் தொழிற்சாலையில் ஏற்கனவே நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி உண்மையெனில் இது மனித உரிமை மீறல் என்று ஆணையம் கருதுகிறது. இதையடுத்து, இது குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு அசாம் தலைமைச் செயலாளருக்கும் கச்சார் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காயமடைந்தவர்களின் நிலை, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகங்களில் 2026 ஜூலை 27 அன்றுவெளியான செய்தியின்படி, வெடிவிபத்து ஏற்பட்டபோது அந்தத் தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290910&reg=48&lang=1 

***

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2291001) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Manipuri , Telugu