பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், தற்சார்பு பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 5:46PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள வேளாண் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தற்சார்பு பஞ்சாயத்துத் திட்டம், ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டிற்கான (சமர்த்) திட்டம் ஆகியவற்றிற்கான பஞ்சாயத்து இணையதளத்தை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான மாதிரி வருவாய் ஆதார விதிமுறைகளையும் வெளியிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தரவு சார்ந்த நிர்வாகம், பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு ஆகியவற்றிற்காக, மின்னணு நிர்வாகத்திற்கான தேசிய விருதுகள் 2026-ன் கீழ்,  அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட தங்க விருதுக்கான கோப்பை, சான்றிதழும் மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் துறைக்கான இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு. விவேக் பரத்வாஜ், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. ராஜீவ் ரஞ்சன் சிங், தற்சார்பு இந்தியாவிற்க்கான, 'சமர்த்' பஞ்சாயத்து இணையதளம்,  மாதிரி விதிகள் ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நிதி ரீதியாக வலுவான, தொழில்நுட்ப வசதி கொண்ட, தற்சார்பு  பஞ்சாயத்துகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைகின்றன என்று திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290029&reg=3&lang=1

(Release ID: 2290029)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290130) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam