பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பசவ ஜெயந்தியையொட்டி ஜகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2026 8:38AM by PIB Chennai

பசவ ஜெயந்தியை முன்னிட்டு ஜகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பசவ ஜெயந்தி எனும் இந்தச் சிறப்புமிக்க நாளில், ஜகத்குரு பசவேஸ்வராவுக்கும் என்றும் நிலைத்திருக்கும் அவரது போதனைகளுக்கும் தாம் மரியாதை செலுத்துவதாக திரு மோடி கூறினார். ஒரு நேர்மையான சமுதாயம் குறித்த பசவேஸ்வராவின் தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவரது தளராத முயற்சிகளும் நம்மை எப்போதும் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“பசவ ஜெயந்தி எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில், ஜகத்குரு பசவேஸ்வராவுக்கும், என்றும் நிலைத்திருக்கும் அவரது போதனைகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன். ஒரு நேர்மையான சமூகம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவரது தளராத முயற்சிகளும் எப்போதும் நம்மை ஊக்குவிக்கும்.”

***

SS/BR/KR

(Release ID: 2253610)


(வெளியீட்டு அடையாள எண்: 2288742) வருகையாளர் எண்ணிக்கை : 30