பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தான் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2026 12:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தான் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். பகல் சுமார் 11:30 மணியளவில், பாலோட்ராவின் பச்பத்ராவில் இந்தியாவின் முதல் பசுமைக்கள  ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்வின் போது அவர் ஒரு பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுவார்.

இந்த மைல்கல் திட்டம் இந்தியாவின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (எச்பிசிஎல்)ராஜஸ்தான் அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள, ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு திறன் கொண்ட இந்தப் பசுமைக்கள சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் ரூ 79,450 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது.

நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வளாகம், சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை ஒருங்கிணைக்கிறது. இதன் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். இந்த சுத்திகரிப்பு ஆலை 17.0 என்ற உயர் நெல்சன் குறியீட்டையும், 26%-க்கும் அதிகமான பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியையும்  கொண்டுள்ளது. இது செயல்திறன் மற்றும் நீடித்தத் தன்மைக்கான உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது.

இந்தத் திட்டம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், பெட்ரோ கெமிக்கல் தற்சார்பை மேம்படுத்துவதிலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் பூங்கா வளர்ச்சிக்கான ஒரு அடிப்படைத் தொழிலாக இது செயல்படும், இது கீழ்நிலைத் தொழில்கள் மற்றும் துணைத் துறைகளை மேம்படுத்தும். கூடுதலாக, இந்தச் சுத்திகரிப்பு ஆலை குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கத் தயாராக உள்ளது.

(Release ID: 2253676)

***

SS/PKV/PD/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2288741) வருகையாளர் எண்ணிக்கை : 26