குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரப் போராட்ட வீரர் திரு சுப்ரமணிய சிவா நினைவு நாளில் அவரது உருவப்படத்திற்குக் குடியரசு துணைத்தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 11:18AM by PIB Chennai

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் திரு சுப்ரமணிய சிவா நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று (23.07.2026) அவரது உருவப்படத்திற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் கூறியதாவது:

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான திரு சுப்ரமணிய சிவா, தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள வத்தலகுண்டு என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் பயணம் செய்து, ‘வந்தே மாதரம்என்ற வீரியமிக்க முழக்கத்தின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்திற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு மக்களுக்கு உத்வேகமூட்டினார். புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரான திரு வ. உ  சிதம்பரத்துடன் பிள்ளையுடன் சேர்ந்து, நாட்டின் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக பிரிட்டிஷ் காலனித்துவ அரசால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைவாசத்தின் போது தொழுநோயால் பாதிக்கப்பட்டபோதும், அது தனது உறுதியைக் குலைக்க அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. தனது இறுதி மூச்சு வரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குத் தொடர்ந்து சேவையாற்றினார். நாட்டின் மீது ஆழ்ந்தப் பற்று கொண்ட அவர், பாரத மாதாவைத் தனது தெய்வமாக வழிபட்டதோடு, தனது வாழ்நாள் முழுவதையும் தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்தார்.

அவரது நினைவு நாளில், இந்த மாபெரும் தேசபக்தருக்கு நாடு தனது ஆழ்ந்த மரியாதையையும் மனமார்ந்த அஞ்சலியையும் செலுத்துகிறது.

 

***

(Release ID: 2288175)

SS/SMB/KR

 


(रिलीज़ आईडी: 2288335) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam