பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதைச் செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 8:12AM by PIB Chennai

லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதைச் செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த ஆளுமையான லோக்மான்ய திலகர், தேசபக்தி உணர்வையூட்டி மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல தலைமுறையினரை ஊக்குவித்தார் என்று அவர்  கூறியுள்ளார்.

நமது கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதிலும்  அவர் மேற்கொண்ட  முயற்சிகள் அதே அளவிற்கு ஊக்கமளிப்பதாக  இருந்தது என்று  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  அவருடைய எழுத்துக்கள்  மக்களுக்கு  புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றும் பெருமை உணர்வை வளர்த்தது என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த ஆளுமையான லோக்மான்ய திலகர், தேசபக்தி உணர்வையூட்டி மக்கள் சேவையில்  தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத்  தலைமுறையினரை ஊக்குவித்தார். நமது கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதிலும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அதே அளவிற்கு ஊக்கமளிப்பதாக  இருந்தது.  அவருடைய எழுத்துக்கள்  மக்களுக்கு  புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி பெருமை உணர்வை வளர்த்தது.”

***

(Release ID 2288113)

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2288314) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam