நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுபிஐ செயலியில், 55.49 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:42PM by PIB Chennai

யுபிஐ செயலி பணம் செலுத்துதல், தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தேசிய பணம் செலுத்துதல் கழகத்தால் (என்பிசிஐ) இயக்கப்பட்டு வரும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அமைப்பாகும்.

ஜூன் 2026 நிலவரப்படி, இந்த செயலியை 55.49 கோடி பயனர்கள் இணைந்துள்ளதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது. என்பிசிஐ அமைப்பின் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கான முழு உரிமையுடைய அதன் துணை நிறுவனமாகும். இது ஏப்ரல் 2020-ல் நிறுவப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, யுபிஐ, ரூபே அட்டைத் திட்டம் போன்ற அதன் பல்வேறு கட்டணச் செலுத்துதல் தளங்களை சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

இது இந்திய சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தடையற்ற எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. அதே வேளையில், நட்பு நாடுகள், நிறுவனங்கள் தங்களது சொந்த பரிவர்த்தனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை (எ.கா., யுபிஐ போன்ற நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்புகள் அல்லது ரூபே போன்ற உள்நாட்டுப் பற்று அட்டைத் திட்டங்கள்) உருவாக்கவும் இது உதவுகிறது.

யுபிஐ அடிப்படையிலான பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் மேற்கொள்வதற்கு, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, என்பிசிஐ போன்ற அமைப்புகளால் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோசடியான பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த, இடர்-அடிப்படையிலான பரிவர்த்தனை வரம்புகள், அங்கீகரிக்கப்படாத மொபைல் எண் மாற்றங்கள்,  குறுஞ்செய்தி அடிப்படையிலான அங்கீகார முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள், யுபிஐ செயலிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தேவைகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், யுபிஐ கட்டமைப்பின் பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்த ஏதுவாக மேம்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கட்டாயமாக்கும் வகையில், விரிவான யுபிஐ தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு 2025, மொபைல் செயலி பாதுகாப்பு கட்டமைப்பு ஆகிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை என்பிசிஐ  வெளியிட்டுள்ளது.

மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு மத்திய நிதி இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி, எழுத்துமூலம் இன்றி அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286608&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2286847) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada