பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குப் பிரதமர் வாழ்த்து

விக்ரம்-1 ராக்கெட் செலுத்தப்படுவதைக் காண நாட்டு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு

प्रविष्टि तिथि: 18 JUL 2026 9:54AM by PIB Chennai

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 சுற்றுவட்டப் பாதையில் ஏவப்படுவதை முன்னிட்டு, அதை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.07.2026) தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்ரம்-1 செலுத்தப்படுவது, இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு ஒரு புதிய எல்லையைத் திறப்பதோடு, புத்தாக்கம், தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவற்றில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டைக் காணுமாறு மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல்!

இன்று காலை 11:30 மணிக்கு, இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1-ஐ, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சுற்றுப்பாதையில் செலுத்தவுள்ளது.

இந்த நான்கு நிலை ராக்கெட், விரைவான முறையில், தேவைக்கேற்ப விண்ணில் செலுத்துதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நமது இளைஞர்களின் திறமை, உறுதிப்பாடு, தொழில்முனைவு மனப்பான்மைகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும், நமது விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், புத்தாக்கம் தொழில்முனைவு ஆகியவற்றுக்கான புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

வெற்றிகரமான செலுத்துதலுக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். விக்ரம்-1 வானில் உயர்ந்து, சரித்திரம் படைத்து, புதிய தலைமுறையைச் சேர்ந்த புத்தாக்கச் சிந்தனையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும்.

அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக எனது இளம் நண்பர்களையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியைப் பின்தொடர்ந்து, #IndiaWithVikram1 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286010&reg=3&lang=1

***

TV/PLM/PD


(रिलीज़ आईडी: 2286037) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Odia , Malayalam