இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
போதைப்பொருள் பயன்பாடு இல்லாத வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில், ஒரு மாத கால பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம்
प्रविष्टि तिथि:
15 JUL 2026 4:01PM by PIB Chennai
2047-ம் ஆண்டில், வளர்ச்சியடைந்த இந்தியா, போதைப்பொருள் பயன்பாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம், 'மை பாரத்' செயலி மூலம், "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப் பொருள் பயன்பாட்டு இல்லாத இளைஞர்" என்ற சிறப்புத் தலைப்பின் கீழ், 2026 ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 15 வரை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வளர்ச்சியடைந்த இந்தியா யுவ கனெக்ட் திட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளது.
ஒரு மாத காலம் நடைபெறும் நாடு தழுவிய இந்த விழிப்புணர்வு முயற்சி, போதைப்பொருள் பயன்பாட்டின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் அதே வேளையில், வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் இளைஞர்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் ஈடுபாட்டை போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுடன் இணைப்பதன் மூலம், ஆரோக்கியமான, பொறுப்பான, போதைப்பொருள் இல்லாத இந்தியாவின் தூதுவர்களாக இளைஞர்களை மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284823®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2285071)
आगंतुक पटल : 7