பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27-28 ஆம் தேதிகளில் சிக்கிம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 APR 2026 3:47PM by PIB Chennai
2026 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்வார். ஏப்ரல் 27 அன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் கேங்டாக் வந்தடைவார். ஏப்ரல் 28 அன்று, காலை சுமார் 930 மணியளவில், கேங்டாக்கில் உள்ள ஆர்க்கிடேரியத்தைப் பிரதமர் பார்வையிடுவார். மாநிலத்தின் சூழலியல் மற்றும் மலர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், ஸ்வர்ணஜயந்தி மைத்ரி மஞ்சரி பூங்கா ஒரு அதிநவீன, உலகத் தரம் வாய்ந்த ஆர்க்கிட் அனுபவ மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை சுமார் 10 மணியளவில், பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் சிக்கிமின் 50-வது மாநில அந்தஸ்து ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பார். அங்கு அவர், மாநிலம் முழுவதும் ₹4,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி கூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுவார்.
இந்தத் திட்டங்கள் உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் சிக்கிமில் முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பிரதமரின் இந்தப் பயணம், சிக்கிம் மாநிலம் உருவானதன் பொன்விழா ஆண்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், மாநிலம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சிக்குத் தற்போதைய அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255675®=3&lang=1
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2284228)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam