பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026-ல் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 13 JUL 2026 1:13PM by PIB Chennai

கொலம்பியாவின் புகாராமங்காவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினரான கனிஷ்க் ஜெயின், ரிதேஷ் ஆனந்த் பென்டாலே,  ரிஷிட் கர்க், ஷ்ரேஸ்த் சுரையா, ஸ்வரித் ஜோஷி ஆகியோருக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர், நாட்டின் இளையோர் சக்தியின் எல்லையற்ற திறனுக்கும், அறிவியல், ஆராய்ச்சி மீதான அவர்களுடைய ஆர்வத்திற்கும் இந்த சாதனை மற்றுமொரு உதாரணம் என்று கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இத்தளத்தின் பல்வேறு பதிப்புகளில் இந்திய மாணவர்கள், சிறப்பாக செயலாற்றியுள்ளதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“நமது இளைஞர்களின் மிகச் சிறப்பான செயல்பாடு!

கொலம்பியாவின் புகாராமங்காவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினரான கனிஷ்க் ஜெயின், ரிதேஷ் ஆனந்த் பென்டாலே,  ரிஷிட் கர்க், ஷ்ரேஸ்த் சுரையா, ஸ்வரித் ஜோஷி ஆகியோருக்கு  வாழ்த்துகள்.

நமது இளையோர் சக்தியின் எல்லையற்ற திறனுக்கும், அறிவியல், ஆராய்ச்சி மீதான அவர்களுடைய ஆர்வத்திற்கும் இந்த சாதனை மற்றுமொரு உதாரணமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இத்தளத்தின் பல்வேறு பதிப்புகளில் நமது மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதும் பாராட்டத்தக்கது.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284032&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2284146) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , Marathi , Gujarati , Telugu , Kannada , Bengali , Bengali-TR , English , Urdu , हिन्दी , Punjabi