பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்

प्रविष्टि तिथि: 11 JUL 2026 8:06AM by PIB Chennai

இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.

தூண் I: அரசியல், ராஜ்ய ரீதியிலான ஈடுபாடு.

* பிரதமர்கள், அமைச்சரவை, அமைச்சர்களுக்கு இடையே வழக்கமான அடிப்படையில் சந்திப்புகளையும் பரஸ்பரப் பயணங்களையும் திட்டமிட முயற்சித்தல்.

* வழக்கமான வெளியுறவு அமைச்சர்களின் உரையாடல் மூலம் பயனுள்ள உயர் மட்ட ஒத்துழைப்பை உறுதி செய்தல்.

* பொதுவான நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த, தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகளுக்கு இடையேயான சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் தீவிரப்படுத்துதல்.

* இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே வழக்கமான நாடாளுமன்றப் பரிமாற்றங்களையும் அரசுமுறைப் பயணங்களையும் ஊக்குவித்தல்.

தூண் II: பாதுகாப்பு ஒத்துழைப்பு

* பயிற்சிகள், படைப்பிரிவுகளின் (கடல், வான், தரை) வருகைகள், குறுகிய கால பணியாளர் பரிமாற்றங்கள், விளையாட்டுப் பயணங்கள், பாதுகாப்புப் பணியாளர் கல்லூரி பரிமாற்றங்கள், உயர் மட்ட பாதுகாப்பு உரையாடல்கள் மூலம் ராணுவத் தொடர்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துதல்.

* இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் கடல்சார் பாதுகாப்புத் தூணின் கீழ் கடல்சார் விஷயங்களில் ஒத்துழைப்பைத் தொடர்தல்.

* இந்தியா-நியூசிலாந்து இணையவழி உரையாடல் மூலம் பகிரப்பட்ட இணையப் பாதுகாப்பு முன்னுரிமைகளில் ஈடுபடுதல்.

* இந்திய தேசிய புலனாய்வு முகமைக்கும் நியூசிலாந்து காவல்துறைக்கும் இடையே சட்ட அமலாக்க ஒத்துழைப்புக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதற்குப் பணியாற்றுதல்.

தூண் III: வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு

*2030-ம் ஆண்டுக்குள் பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு இருவழி வர்த்தகத்தை ₹35,000 கோடியாக இரட்டிப்பாக்கும் இலட்சிய இலக்கை நோக்கிப் பணியாற்றுதல்.

* இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வருவதையும் திறம்பட செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய, அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றுதல்.

தூண் IV: மக்கள், கலாச்சாரம், விளையாட்டு

* இருதரப்பு மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதில் புலம்பெயர் சமூகங்களை ஈடுபடுத்துதல்.

* 2025-ம் ஆண்டின் விளையாட்டு தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்துதல்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கும், நியூசிலாந்து விளையாட்டுத் துறைக்கும் இடையிலான இந்தியா-நியூசிலாந்து கூட்டு விளையாட்டுச் செயல் திட்டத்தைச் செயல்படுத்துதல்.

* நமது கலாச்சாரங்களைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக, கலாச்சார ஒத்துழைப்புக்கான ஏற்பாட்டைச் செயல்படுத்துதல்.

தூண் V: கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு

* இந்தியா, நியூசிலாந்தின் கல்வி அமைப்புகள் குறித்த தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக, இரு கல்வி அமைச்சகங்களுக்கு இடையேயான 2025 கல்வி ஒத்துழைப்பு ஏற்பாட்டைச் செயல்படுத்துதல்.

*  நிலையான எரிசக்தி மாற்றங்களுக்கு ஆதரவளிக்க உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியுடன் இணைந்து செயல்படுதல்.

*தயார்நிலை, அவசரகால பதில் நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் நியூசிலாந்து தேசிய அவசரகால மேலாண்மை முகமைக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துதல்.

தூண் VI: பிராந்திய, பலதரப்பு ஒத்துழைப்பு

* விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பகுதியை நிலைநிறுத்த, ஆசியான் தலைமையிலான அமைப்பிலும் பிற பிராந்திய மன்றங்களிலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல்.

* ஐ.நா. சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தல்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283529&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2283622) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam