உள்துறை அமைச்சகம்
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழா: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு
प्रविष्टि तिथि:
06 JUL 2026 9:33PM by PIB Chennai
கொல்கத்தாவில் நடைபெற்ற டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் காணொளிச் செய்தி ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பெரும் தியாகம் செய்தார் என்று குறிப்பிட்டார். நேரு-லியாகத் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் முதலாவது மத்திய அமைச்சரவையிலிருந்து அவர் விலகியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் கொள்கைகள் நாட்டின் கலாச்சார மரபுகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் ஒரே சட்டம், ஒரே தலைவர், ஒரே சின்னம் என்ற அவரது லட்சியத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார் என்று அவர் தெரிவித்தார். அவரது நினைவாக கொல்கத்தாவில் 125 அடி உயர பிரமாண்ட சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்காக சியாமா பிரசாத் முகர்ஜி நிறுவனமும் நிறுவப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் திரு சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷேகாவத் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281845®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2282384)
आगंतुक पटल : 8