பிரதமர் அலுவலகம்
நுகர்வோர் நலனுக்கான இ-ஜாக்ரிதி தளம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 JUL 2026 2:03PM by PIB Chennai
நுகர்வோர் அளிக்கும் புகார்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இ-ஜாக்ரிதி எவ்வாறு பல சவால்களுக்கு தீர்வு காண்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பல்வேறு தரப்பினரின் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, இ-ஜாக்ரிதி செம்மைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிடுவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தக் கட்டுரையில், ஒரு நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களின் முழு சுழற்சியையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இ-ஜாக்ரிதி எவ்வாறு பல சவால்களுக்கு தீர்வு காண்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி விரிவாக விளக்குகிறார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகளைத் தொடர்ந்து, கட்டமைப்பு ரீதியான டிஜிட்டல் சீர்திருத்தத்திற்கு உட்படும் துறைகளில் நுகர்வோர் நீதியையும் சேர்த்து, இ-ஜாக்ரிதி செம்மைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
https://livemint.com/opinion/columns/ejagriti-reimagining-consumer-justice-for-a-digital-india-pralhad-joshi-11783001218221.html"
***
(Release ID: 2281010)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281057)
आगंतुक पटल : 13