நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட தரமான அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 3:33PM by PIB Chennai
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ், மேம்படுத்தப்பட்ட தரமான அரிசி வழங்குவதற்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் சிறந்த தரமான அரிசி பெறவுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக பொது விநியோக முறையில் வழங்கப்படும் அரிசிக்கான தரக்குறியீட்டை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது. இதன்மூலம் பயனாளிகளுக்கு உணவுப்பொருள் வழங்கும்போது, உடைந்த தானியத்தின் அளவு கணிசமான குறைவது உறுதி செய்யப்படும்.
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் பச்சரிசியில் தற்போது 25 சதவீதமாக உள்ள உடைந்த தானிய அளவு 10 சதவீதமாக குறைக்கப்படும். இதேபோல் புழுங்கல் அரிசியில் 16 சதவீதமாக உள்ள உடைந்த தானிய அளவு 5 சதவீதமாக குறைக்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட தரம் உள்ள அரிசி கொள்முதல் உடனடியாக தொடங்கப்பட்டு படிப்படியாக 2027-28 கஃரீப் சந்தைப் பருவத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் முன்னோட்டம் ஹரியானா, ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, தெலங்கானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280307®=3&lang=1
***
SS/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2280498)
आगंतुक पटल : 9