PIB Backgrounder
இ-சரஸ்: சந்தை விரிவாக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:02PM by PIB Chennai
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் தீன் தயாள் அந்த்யோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், இ-சரஸ் என்ற அதிகாரப்பூர்வ இணையவழி சந்தையை உருவாக்கியுள்ளது. கிராமப்புறப் பெண்கள், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்கு தேசிய அளவில் நேரடி சந்தை வாய்ப்பை வழங்குவதில் இது ஒரு முக்கிய முன்முயற்சியாகத் திகழ்கிறது.
கடந்த பதினொரு ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா இயக்கம் பொதுச் சேவை விநியோகத்தை வெளிப்படையானதாகவும், எளிமையானதாகவும் மாற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பப் புரட்சி தற்போது நகரங்களைத் தாண்டி கிராமப்புற இந்தியாவின் பொருளாதார வலிமைக்கும், பெண்களின் தொழில்முனைவு மேம்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல், நுகர்வோரை நேரடியாகச் சென்றடைய இந்த டிஜிட்டல் தளம் உதவுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி புடவை நெசவாளர்கள், ராஜஸ்தானின் பளிங்குக்கல் கைவினைக்கலைஞர்கள், ஜம்மு காஷ்மீரின் பசுமைப் பள்ளத்தாக்கு பஷ்மினா உற்பத்தியாளர்கள் என நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட பொருட்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்கான ஆடைகள், தனிநபர் பராமரிப்பு, உணவுப் பொருட்கள், விளையாட்டுகள் எனப் பல பிரிவுகளில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
2024 பிப்ரவரி நிலவரப்படி, 8.62 கோடிக்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இதன் மூலம் டிஜிட்டல் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு சந்தைப்படுத்துதல், தரமான வர்த்தக முத்திரை, தளவாடக் கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவன ரீதியான ஆதரவை வழங்குகிறது. நாடு முழுவதும் 7,627 வட்டங்களில் பரவியுள்ள இந்த இயக்கம், அடிமட்ட அளவில் 1.51 கோடி சமூக உறுப்பினர்களைக் கொண்ட வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு சாதாரண இணையதளமாக தொடங்கப்பட்டு, தற்போது மொபைல் செயலி, இயற்பியல் கண்காட்சி கூடம், தேசிய அளவிலான சரஸ் விழாக்கள், தளவாட மையங்கள், நாட்டின் மிகப்பெரிய திறந்தநிலை மின்னணு வணிகக் கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் முழுமையான வர்த்தகத் தளமாக மாறியுள்ளது. 2026 ஜூன் நிலவரப்படி, உமாங் செயலியுடன் இணைக்கப்பட்டதன் மூலம் 700 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் இ-சரஸ் தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, தற்சார்பு கொண்ட கிராமப்புறப் பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், வளர்ச்சியை நோக்கிப் பெண்களை வழிநடத்துவதிலும் இ-சரஸ் தளம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279692®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2280053)
आगंतुक पटल : 8