பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நம்பகமான செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம், சர்வதேச ஒத்துழைப்பு குறித்து மிஸ்ட்ரல் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர்தர் மென்ஷுடன் பிரதமர் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 6:44PM by PIB Chennai

உலக அளவில் மாறிவரும் செயற்கை நுண்ணறிவு சூழல் குறித்து, மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர்தர் மென்ஷுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடலை மேற்கொண்டார்.

நம்பகமான செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு மனிதனை மையமாகக் கொண்டதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதன் அவசியம் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல்வேறு அம்சங்களில் இந்தியாவில் கூட்டாண்மைக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தாக  திரு மோடி குறிப்பிட்டார்.

புதுமை, நம்பிக்கை, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே வேளையில், மனிதகுலத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்குவதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:

“மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்தர் மென்ஷுடன், வளர்ந்து வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுச் சூழல் குறித்து கருத்தாழமிக்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டேன். நம்பகமான செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் ஆகியவற்றுடன், செயற்கை நுண்ணறிவு மனிதனை மையமாகக் கொண்டதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல்வேறு அம்சங்களில் இந்தியாவில் கூட்டாண்மைக்கான வாய்ப்புகள் குறித்தும் பேசினோம். புத்தாக்கம், நம்பிக்கை, சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில், மனிதகுலத்திற்கு வலுவூட்டும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது”.

***

(Release ID: 2274784)

SS/RB/PD


(रिलीज़ आईडी: 2279712) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam